பொருளாதாரத்தில் மாற்றங்கள் என்பது வாரத்திற்கு ஒருமுறை நிகழக்கூடியது அல்ல; மெதுவாக இயங்கும் ஒரு தொடர் நிகழ்வு. இதனை நாம் உணரும்போது நம்மிடையே உற்சாகம் குறையலாம். ஆனால், இத்தகைய மெதுவான மாற்றங்கள் பொருளாதாரத்தை சிறப்பான இடத்தை நோக்கி நகற்றுகின்றனவா, மோசமான இடத்தை நோக்கி நகற்றுகின்றனவா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். பங்குக் குறீயீடுகளினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதாக முதலீட்டாளர்கள் அடிக்கடி எண்ணிகொள்கின்றனர். கண்டிப்பாக, அப்படி எண்ணுவது சரியான வழி அல்ல.

தற்போதுள்ள மிதமான பொருளாதார மாற்றங்களில் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது கமாடிட்டிகளின் மிதமான விலை. கமாடிட்டிகளின் மிதமான விலைகளினால் வர்த்தகம் சிறப்பாக நடைபெறும்; வரும் காலாண்டுகளில் இதன் தாக்கம் தெரியும். பங்குச்சந்தையில் எதிர்பார்ப்பதை விட மாற்றங்கள் குறைவாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் அமைதியை இழந்துவிடுவார்கள். விழிப்புணர்வுடனும், நுட்பமாக உணர்ந்து செயல்படவும் முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை மிகச்சரியாக கையாளக்கூடியவர்களுக்கு தம்முன்னே இருக்கும் வாய்ப்புகளின் முக்கியத்துவம் புரியும்.

Recent Posts

Fixed Income Market | March 2021

Posted on March 2, 2021

Dark Clouds Are Here

Posted on February 27, 2021
Open chat